Tuesday, August 4, 2015

Thendral: முழு நிலா முற்றத்திற்காக வாசித்த-கவிதை

Thendral: முழு நிலா முற்றத்திற்காக வாசித்த-கவிதை: முழு நிலா முற்றத்திற்காக வாசித்த-கவிதை ---------------------------------------------------------------------------- அழகான தங்கத்தட்டென்...

Thursday, April 23, 2015

வகுப்பறை: நகைச்சுவை: தாலிகட்டி கூட்டிக்கிட்டு வர்றதுன்னா என்...

வகுப்பறை: நகைச்சுவை: தாலிகட்டி கூட்டிக்கிட்டு வர்றதுன்னா என்...: நகைச்சுவை: தாலிகட்டி கூட்டிக்கிட்டு வர்றதுன்னா என்ன? நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் மட்டும் படிக்கலாம். மற்றவர்கள் பதிவை விட்டு விலகவும...

Monday, February 2, 2015

மனஅலைகள்: தமிழ் ஈழம்.

ஐயா
பின்னூட்டப் பெட்டி மூடினால் என்ன? எலி எப்படியாவது வழி கண்டுபிடிப்பது போல உங்களுக்குப் பின்னூட்டம் போட நான் ஒரு எலி இருக்கிறேன்.
கல்கியின்
பொன்னியின் செல்வன் வாசிக்கவும். சோழர் காலத்தில் ராஜராஜ சோழன் மற்றும்
ராஜேந்திர சோழன் காலத்தில் தமிழர்கள் தான் இலங்கையை ஆண்டார்கள்.ஆட்சி மாறி
சிங்களவர்கள் ஆண்டார்கள்.

பூகோள இயல்படி இந்திய உபகண்டத்தில் இருந்துதான் இலங்கை  உருவானது. அதாவது இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போதே தமிழர்கள் அங்கு இருந்தார்கள்.
சிங்களவர்கள்
தங்களது பூர்வீகம் இந்தியாவில் உள்ள ஒரிசா மாநிலத்தை (கலிங்கம்)
சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்கின்றனர். சிங்கள எழுத்தும் ஒரியாவும்
ஒன்று போல் இருப்பதைக்காணலாம். மேலும் அசோகர் பரம்பரையில் வந்த புத்த மத
பிக்குகள் இலங்கையில் குடியேறி புத்த மதத்தைப் பரப்பினார்கள்.
ஆங்கிலயர்கள்
காலத்தில் தமிழர்கள் நல்ல பதவிகளிலும் செல்வாக்குடனும் இருந்தனர்
(பார்ப்பனர்களைப்போல). சுதந்திரம் அடைந்த பின்பு சிங்களவர்கள் எங்கும்
எதிலும் முன்னுரிமை கொண்டாடி தமிழர்களின் பதவி மற்றும் செல்வாக்கு ஆகியவை
இல்லாமல் செய்துவிட்டனர் (சட்டப்படி).
தமிழர்கள் இரண்டாந்தரம் குடிமக்கள் ஆக, அவர்கள் உரிமைக்கு போராட வேண்டி வந்தது. முக்கியமாக மொழித்திணிப்பு மற்றும் நில உரிமைப்  பறிப்பு தமிழர்களைப்  போராட வைத்தது.
தமிழ் ஈழம் தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை, கிடைக்காது, கிடைக்கப்போவதும் இல்லை. பிரச்சினை காஷ்மீர் பிரச்சினை போன்று போய் கொண்டே இருக்கும். முடியும் ஆனால் முடியாது.


Jayakumar
மனஅலைகள்: தமிழ் ஈழம்.